பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான ராஜேந்திரன், தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். படத்தில் ஹீரோ, ஹீரோயின் கூட இல்லாமல் இருப்பார்கள் ஆனால் மொட்டை ராஜேந்திரன் இல்லாமல் படமே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு அனைத்துப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
நிக்க கூட நேரம் இல்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரன், மீது இயக்குநர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதவாது, கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த் வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்த உடனேயே வெளியான ஒரு சில படங்களில் ‘முந்தல்’ என்ற படமும் ஒன்று. ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கியிருந்த இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்காக புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்த முன்னணி தொலைக்காட்சி முடிவு செய்திருந்தது. அதற்காக மொட்டை ராஜேந்திரன் அவர்கள் அழைத்து வரும்படி இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்கள். படப்பிடிப்புகள் இல்லாத சமயம் என்பதால், ராஜேந்திரன் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையோடு, அவரை தொடர்பு கொண்ட இயக்குநருக்கு பெருத்த ஏமாற்றம், காரணம், ராஜேந்திரன் வர முடியாது என்று கூறியதோடு, ரொம்பவே கராராக நடந்துக்கொண்டாராம்.
சிறு படங்களுக்கு தொலைக்காட்சிகள் புரோமோஷன் கொடுப்பதே பெரிய விஷயம், அப்படி ஒரு தொலைக்காட்சி புரோமோஷன் வழங்க முன் வருகிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம், ஆனால் ராஜேந்திரன் வராததால் அந்த புரோமோஷன் நிகழ்ச்சியே நடைபெறாமால் போய்விட்டதாம். இதனால், இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்.
மொட்டை ராஜேந்திரன் ஸ்டண்ட் யூனியனின் உறுப்பினர் என்பதால் ஸ்டண்ட் ஜெயன், தான் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ராஜேந்திரனை நடிக்க வைத்திருப்பதோடு, அவர் தனதுக்கு ஒத்துழைப்பாக இருப்பார் என்றும் நம்பியிருக்கிறார். அதே சமயம், பேசிய சம்பளத்தை ஒரு பைசா கூட பாக்கி இல்லாமலும் செட்டில் செய்திருக்கிறார். இவ்வளவு செய்தும் தனக்கு ராஜேந்திரன் ஒத்துழைப்பு தர மறுத்தது குறித்து ஜெயந்த், ஸ்டண்ட் யூனியைல் புகார் அளித்துள்ளார். விரைவில் ஸ்டண்ட் யூனியன் ராஜேந்திரனை அழைத்து விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘முந்தல்’ தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...