ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறியப்பட்ட ஜூலி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பெரிய அளவில் பிரபலமானார். இருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவருக்கு கிடைத்த மக்களின் ஆதரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைக்கவில்லை. மாறாக மக்களின் வெறுப்பு தான் அவருக்கு கிடைத்தது.
வெறுப்போ, ஆதரவோ மக்களிடம் இருந்து எது கிடைத்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாத ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து தற்போது கோடம்பாக்க கதாநாயகி ஆகிவிட்டார். ஆம், ‘பத்தினி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ஜூலி, தற்போது ‘அம்மன் தாயி’ என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படி சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ஜூலி, தான் நடிக்கும் படங்கள் ரிலீஸாவதற்கு முன்பாகவே அஜித்தைப் போல மாற முயற்சித்து வருகிறார். ஆம், அஜித் எப்படி தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் பங்கேற்பதையும், பேட்டி கொடுப்பதையும் தவிர்ப்பாரோ அதுபோல ஜூலியும், பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறாராம்.
கேற்கும் சம்பளத்தை கொடுத்தால், நடிக்க ரெடி. ஆனால் மீடியாக்களுக்கு பேட்டியெல்லாம் கொடுக்க மாட்டேன், என்ற கண்டிஷனோடு தான் நடிக்கவே சம்மதிக்கிறாராம். தற்போது அவர் நடித்து வரும் படங்களிலும் இதே கண்டிஷனோடு தான் நடித்து வருகிறாராம்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...