கருணாஸ் நடித்த ‘சந்தமாமா’, ‘ராரா’ ஆகியப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுவேதா பாசு. இவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடிதிதிருக்கிறார். மேலும், குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் சுவேதா பாசு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுவேதா பாசுவுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது, இந்தி படம் ஒன்றில் நடித்திருக்கும் சுவேதா பாசு, ‘கேங்க்ஸ்டர்’ என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சுவேதா பாசுவுக்கு தற்போது இந்தி டைரக்டர் ரோஹித் மிட்டலுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...