10 முதல் 15 வருடங்கள் வரை தான் நடிகைகள் முன்னணியில் இருக்கிறார்கள், அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு தொடர்ந்து நடித்தாலும் அவர்களுக்கு அக்கா, அண்ணி போன்ற வேடங்கள் தான் கொடுக்கப்படுகின்றன. அதனால் இந்த பத்து வருடங்களில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு தொடர்ந்து ஹீரோயினாக ஜெயிக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலானா நடிகைகளின் குறிக்கோளாக இருக்கிறது.
ஆனால், இதில் சில நடிகைகள் சில காரணங்களால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போகிறது. அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் விஜய் பட நாயகி நித்யா மேனன். ‘மெர்சல்’ படம் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், நல்ல அழகாக இருப்பதோடு, நடிப்பிலும் கெட்டிக்காரர் என்பதால் பல மொழிகளில் இருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன.
அதே சமயம், இவரது உடலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், இவர் ரொம்பவே சிரமப்படுகிறார். இதற்கு காரணம் இவருக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறதாம். அதனால் தான் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறதாம். அதற்காக தீவிர சிகிச்சை எடுத்தாலும், உடல் எடை அதிகரிப்பை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.
இந்த நிலையில், ஒரு தெலுங்குப் பட வாய்ப்பு வர, அப்பட இயக்குநர் கேரக்டருக்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நிதயா மேனனிடம் கூறியிருக்கிறார். ஆனால், அவர் உடல் எடையை குறைக்க முடியாது என்று கராராக சொல்லிவிட, அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது.
இப்படி தனது உடல் எடையை காரணம் காட்டி வாய்ப்புகள் நிராகரிக்கப்படுவதால், நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவுக்கு நித்யா மேனன் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், பாட்டு பாடுவது, திரைப்படம் இயக்குவது என்று சினிமாவில் தனது பயணத்தை தொடர நித்யா மேனன் முடிவு செய்திருக்கிறாராம்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...