ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், அதனை தடுக்க காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூற கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற ரஜினிகாந்தை, பார்த்து ”நீங்கள் யார்?” இளைஞர் ஒருவர் கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஜினிகாந்தும் தேவையில்லாமல் பேசி பெயரை கெடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று இரவு பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
எந்த முன் அறிவிப்பும் இன்றி, சத்தமில்லாமல் நேற்று இரவு தூத்துக்குடிக்கு விசிட் அடித்த விஜய், சாதாரண மனிதரைப் போல பைக்கில் சென்று போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும் ஆறுதல் கூறியுள்ளார்.
விஜயின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பு பெற்றதோடு, விஜய் தூத்துக்குடி சென்ற புகைப்படங்களும், வீடியோவும் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக உள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...