1999 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜாவனம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெய் ஆகாஷ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிப்பதோடு, இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக திகழும் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தாலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
தொடர்ந்து சொந்தமாக படங்களை தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் ஜெய் ஆகாஷ், தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘சென்னை 2 பாங்காக்’. இதில் யோகி பாபு, சாம்ஸ், பவர் ஸ்டார், பொன்னம்பலம் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் தாவடி ஸ்ரீ வத பத்ரகாளி அம்பாள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை 2 பாங்காக்’ படத்தை சதீஷ் சந்தோஷ் இயக்க, யு.கே.முரளி இசையமைக்கிறார். தேவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளர்களின் சங்கத்தின் தலைவர் இசையமைப்பாளர் தினா கலந்துக் கொண்டு இசைத்தகடை வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஜெய் ஆகாஷின் அடுத்தப் படமான ‘லுங்கி ராஜா’ படக்குழுவினரும் கலந்துக்கொண்டனர்.
இப்படம் குறித்து பேசிய ஜெய் ஆகாஷ், “தமிழில் உருவாகும் என் படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதேபோல், இந்தியிலும் டப் செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து என் படங்களுக்கு எவ்வளவு வியாபாரம் இருக்குமோ, அந்த பட்ஜெட்டில் நான் படம் எடுத்தாலும் படத்தை பிரம்மாண்டமாகவே எடுத்து வருகிறே.
இந்த படத்தில் பிஸியாக இருக்கும் யோசி பாபு, சாம்ஸ், பவர் ஸ்டார் என்று பல முன்னணி கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருந்தால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள், வந்த பிறகு அவர்களை படத்தை ரசிக்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்துவிடுவேன்.
இந்த படம் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் எடுத்திருக்கிறேன். இது ஒரு துப்பறியும் கதையாக இருப்பதோடு, சஸ்பென்ஸ் திரில்லட் படமாகவும் இருக்கும். அதே சமயம், படத்தில் காமெடி ரொம்பவே ஹைலைட்டாக வந்திருக்கிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் சாம்ஸ், ”ஜெய்சங்கருக்கு பிறகு தமிழகத்தின் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஜெய் ஆகாஷ் தான்” என்று கூறியிருப்பார். அந்த வசனம் நான் சொல்லிக் கொடுத்தது அல்ல, அவரே ஸ்பாட்டில் சொன்னது. படத்தை பார்க்கும் ரசிகர்களும் நிச்சயம் அதை சொல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த படத்திற்காக என குழுவினர் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார்கள். பாங்காக்கில் அவர்களுக்கு ஓய்வே கொடுக்காமல் நாம் வேலை வாங்கினேன். காரணம் பட்ஜெட்டில் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.
யு.கே.முரளி சாரின் இசையில் இரண்டு பாடல் ரொம்பவே சிறப்பாக வந்திருக்கிறது. அதிகமான பாடல்களை வைத்தால் ரசிகர்கள் விரும்புவதில்லை என்பதால், இரண்டு பாடல் மட்டுமே படத்தில் வைத்திருக்கிறேன். ஒன்று அதிரடியான குத்து பாடலாகவும், மற்றொன்று காதல் பாடலாகவும் இருக்கும்.” என்றார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...