ரஜினிகாந்த் - இயக்குநர் ரஞ்சித் கூட்டணியின் இரண்டாவது படமான ‘காலா’ நாளை உலகம் முழுவதும் வெளியாகப் போகிறது. தடை விதிக்கப்பட்டிருந்த கர்நாடகாவிலும் நாளை படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.
இதற்கிடையே, சென்னையின் முக்கியமான சில திரையரங்குகளில் ‘காலா’ வெளியாகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விசாரித்ததில், தயாரிப்பு தரப்பு அதிக விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்ய சொன்னதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் படத்தை கொடுக்கவில்லை, என்று தியேட்டர் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்றும் ரஜினி ரசிகர் தரப்பு கூறுகிறது. காரணம், தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சாதாரண கட்டணத்திற்கு தான் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். ஒரு சில தியேட்டர்களில் கவுண்டரிலேயே ரூ.200 விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையின் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் படம் வெளியான முதல் நாளில் அதிகப்படியான ஷோக்கள் ஓட்டப்படும். அந்த திரையரங்கில் அதிக ஷோக்கள் ஓடிய படமாக இன்று வரை இருப்பது அஜித்தின் ‘பில்லா 2’ தான். 110 ஷோக்கள் ஓட்டப்பட்டது. அஜித்தின் இந்த சாதனையை ‘காலா’ மூலம் ரஜினி முறியடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த திரையரங்கில் ‘காலா’ 95 ஷோக்கள் மட்டுமே ஓட்டப்படுகிறது. இதனால், அஜித் சாதனையை ரஜினி முறியடிக்க தவறிவிட்டார்.
இதற்கு காரணம், காலா படத்தின் டிக்கெட் முன்பதிவில் ஏற்பட்ட மந்தமான நிலை தான் என்றும் கூறப்படுகிறது. காலா முன் பதிவு பெரிய அளவில் இல்லாததால், சில திரையரங்கங்களில் ‘ஜுராஸிக் பார்க்’ திரைப்படமும் திரையிடப்படுவதால், ‘காலா’ ஷோ எண்ணிக்கை குறைந்துவிட்டது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...