விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்தில் இருந்த அரசியல் வசனங்களால் அப்படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. ஆனால், அதுவே படத்திற்கான மிகப்பெரிய விளம்பரமாக அமைந்ததால் படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியது.
‘மெர்சல்’ வெளியான முதல் நாளே தமிழகத்தில் மட்டும் ரூ.22 கோடி வரை வசூல் செய்தது. இந்த வசூலை ரஜினிகாந்தின் ‘காலா’ முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு ‘காலா’ படத்திற்கு எதிராக பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, பல இடங்களில் தடை விதிக்கப்பட்டதால், செய்திகளில் காலா அடிபட்டதால், படம் மிகப்பெரிய அளவில் ரீச்சாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இன்று வெளியான படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும் வசூலில் படம் பின்னடைவை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், விஜயின் ‘மெர்சல்’ வசூல் சாதனையை ரஜினியின் ‘காலா’ முறியடிக்காமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம், ‘காலா’வின் முன்பதிவு மந்தமாக நடைபெற்றது தான். சென்னையில் உள்ள முன்னணி திரையரங்கம் ஒன்றில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ‘காலா’ ஹவுஸ் புல்லாகியிருக்கிறதாம். மற்ற நாட்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...