’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு சிம்பு தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் இழந்துவிட்டாரோ, என்ற நிலை உருவான நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் சிம்பு மீது கூறிய புகார்களால் அவரை வைத்து இனி யாரும் படம் எடுக்க முன் வர மாட்டார்கள், என்ற நிலையை உருவாக்கியது.
இதற்கிடையே, மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கிய சிம்பு, அப்படத்தில் எந்தவித பஞ்சாயத்தும் இல்லாமல் நடித்து கொடுத்ததோடு, காவிரி விவகாரத்தில் தமிழக மக்களிடம் மட்டும் இன்றி, கர்நாடக மக்களிடமும் நல்ல பெயர் எடுத்ததோடு, தொடர்ந்து தனது நடவடிக்கையால் நல்ல பையன் என்ற பெயரையும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ’செக்க சிவந்த வானம்’ படத்தை முடித்திருக்கும் சிம்புவை வைத்து விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிம்புவே ஒரு படத்தை எழுதி இயக்கி நடிக்க இருக்கிறாராம். இந்த படத்திற்குப் பிறகு கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு, கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மொத்தத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிஸியாகி இருக்கும் சிம்பு கையில் தற்போது 4 படங்கள் இருக்கிறதாம்.
சிம்புவுக்கு இப்படி திடீர் மவுசு கிடைத்ததற்கு, அவர் சமீபத்தில் “இனி தன்னால் எந்த பிரச்சினையும் வராது”, என்று உருக்கமாக பேசியது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...