‘தையல்காரன்’, ‘கிழக்கே வரும் பாட்டு’, ‘முஸ்தபா’, ‘மனசே மவுனமா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் சர்மிளா. தமிழ் மட்டும் இன்றி மலையாளப் படங்களிலும் நடித்திருக்கும் இவர், தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது சொந்த வீடு, பணம் ஆகியவற்றை இழந்து ரொம்பவே கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சர்மிளா, நடிக்க வாய்ப்பு கேட்டு அழுது புலம்புகிறார்.
இது குறித்து அவர் கேரளாவில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தும் எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டன. இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆரோக்கியத்தையும் இழந்து விட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் என் வாழ்க்கையில் முன்பே நடந்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பேன். ஆனால் இப்போது சாக முடியாது.
படுக்கையில் இருக்கும் எனது தாயாரை கவனிக்க வேண்டி உள்ளது. மகன் நலனும் முக்கியம். அதனால் தற்கொலை முடிவை எடுக்கவில்லை. எனது கஷ்டம் மகனுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் நிறைய படங்களில் நடித்தேன். இப்போது பெரிய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டால் அவர்கள் தர தயாராக இல்லை. எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்.
எதிர்காலத்துக்காக பணம் சேர்க்காமல் இருந்தது நான் செய்த பெரிய தவறு. திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறியது. எனது வீட்டையும் நிலத்தையும் விற்க வைத்தனர். நான் செய்த பெரிய தவறு வீட்டை விற்றதுதான். அந்த வீடுதான் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. வீடு போன பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் எடை குறைந்து எனது ஆரோக்கியமே கெட்டுப் போய்விட்டது.” என்று கூறியுள்ளார்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...