ரஜினிகாந்தின் ‘காலா’ நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வசூல் செய்யாதத படக்குழுவினருக்கு பெருத்த ஏமாற்றம் அளித்திருக்கிறது.
இது குறித்து பேட்டியளித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான நடிகர் விஷால், “தேவையில்லாமல் காலா படத்தை காவிரி விவகாரத்துடன் தொடர்ப்பு படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இது படத்தின் முதல் நாளில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என தெரியவில்லை. ஆனால் இறுதியில் ரஜினி சார் ரஜினி சார் தான் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.
அவரது எந்த படத்துக்கும் அபாரமான வரவேற்று கிடைக்கும். காலாவின் முதல் நாள் வசூல் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்ய எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
இது ரமலான் நோம்பு காலம் என்பதால், அவரது கணிசமான ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு வாய்ப்பு குறைவு. மிக விரைவில் காலாவை பார்ப்பார்கள்.
இவ்வளவு சீக்கிரம் படத்தின் வசூல் பற்றி ஒரு முடிவுக்கு வருவது தவறு. வரும் நாட்களில் வசூல் அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக ‘காலா’ பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு என்ன காரணம், என்று ரஜினிகாந்த் தரப்பு ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...