Latest News :

’பிக் பாஸ் 2’ போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அனுயா!
Friday June-08 2018

வரும் ஜூன் 17 ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க இருக்கிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பல பிரபலங்கள் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் போக ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், இந்த முறை முன்னணி பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக இருப்பார்கள்.

 

அதே சமயம், பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பது அவ்வளவு சுலபம் இல்லை, என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாக போட்டியாளர்கள் பலர் தற்போது எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 

ஹரிஷ் கல்யாண், ஒரு பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான் நான் மக்களிடம் ரீச் ஆனேன், என்று கூறியதோடு, அந்த வீட்டுக்குள்ள போங்க...போய் பாருங்க தெரியும், என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று 6 நாட்களில் அவுட் ஆகி வெளியேறிய அனுயா, பிக் பாஸ் 2 போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தோணியில் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இது குறித்து பேட்டியில் கூறிய அனுயா, “எனக்கு செகண்ட் சான்ஸ் கிடைச்சா பிக் பாஸ் போட்டியாளரா உள்ளே போகத் தயாரா இருக்கேன். ப்ளீஸ் எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. ஆனா, மறுபடியும் சொல்றேன் அங்கே இருக்கிறது அவ்வளவு ஈஸி இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

2750

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

Recent Gallery