விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான ‘கடுகு’ படத்தில் சுபிக்ஷா ஹீரோயினாக நடித்தாலும் அவரது கதாபாத்திரத்திற்கான வேலை கடுகின் அளவே இருந்தது. இருந்தாலும், அந்த சிறிய வேலையை சிறப்பாக செய்திருந்தவருக்கு விஜய் மில்டன் தனது ‘கோலி சோடா 2’விலும் வேலை கொடுத்திருக்கிறார்.
இந்த முறை கடுகு அளவுக்கு வேலை கொடுக்காமல் பெரிய அளவில் சுபிக்ஷாவை விஜய் மில்டன் பயன்படுத்தியிருக்கிறார் என்பது சுபிக்ஷாவின் பேச்சிலே தெரிகிறது. இது பற்றி சுபிக்ஷா நம்மிடம் பகிர்ந்துக்கொள்கையில், “கடுகு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை கடுகு சுபிக்ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது, மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.
படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.
கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொன்னேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார் போல, கோலி சோடா 2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்றார்.
வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘கோலி சோடா 2’ படத்தில் சமுத்திரக்கனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹினி, ஸ்டன்
ஸ்டன் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அச்சு இசையமைத்திருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். சுப்ரீம் சுந்தரின் ஆக்ஷன் காட்சிகள் பெரும் வரவேற்பு பெற்றிருப்பது போல, இப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...