ஒரு திரைப்படம் மக்களிடம் வருவதற்கு முன்பாக விநியோகஸ்தர்களாக சினிமா வியாபாரிகளுக்கு தான் முதன் முதலில் திரையிடப்படும், படத்தைப் பார்க்கும் அவர்கள் ஓகே சொல்லும் படங்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் தான். ஆனால், அந்த வழக்கம் எல்லாம் மலையேறி போய்விட்டது.
தற்போதைய சினிமா சூழலை பொருத்தவரை, படத்தை போட்டுக் காட்டாமல் வியாபாரம் செய்வது தான் டிரெண்டாகிவிட்டது. இதனால் தான் ரிலிஸுக்கு முன்பு பெருமை பேசிய பல படங்கள் ரிலிஸுக்கு பிறகு படு தோல்வியடைகின்றது.
இந்த நிலையை மாற்றும் முயற்சியில் இறங்கிய ‘டிராபிக் ராமசாமி’ படக்குழுவினர் படத்தை பிரத்யேகமாக திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சமீபத்தில் திரையிட்டுள்ளனர். படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படம் முடிந்த உடன், எழுந்து நின்று கைதட்டி படத்தை பாராட்டியது, படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இது குறித்து கூறிய இயக்குநர் விக்கி, “விநியோகஸ்தர்கள் ஒரு படத்தை ப்ரிவியூ அரங்கில் பார்த்துவிட்டு கைதட்டி வரவேற்பது இது முதல் முறை என்று எண்ணுகிறேன். இப்பாராட்டு சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராஃபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்விற்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.” என்றார்.
புரட்சி இயக்குநர் என்று பெயர் எடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர், இப்படத்தில் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் நடிக்கிறார், என்பதே இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது விநியோகஸ்தர்கள் பாராட்டிய சம்பவம் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிரிகரிக்க செய்திருக்கிறது.
ரோஹினி, பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியும், விஜய் சேதுபதியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட புகழ் பாலமுரளு பாலு இசையமைத்திருக்கிறார். பிரபாகர் படத்தொகுப்பு செய்ய, ஏ.வனராஜ் கலையை நிர்மாணித்திருக்கிறார். அன்பறிவு சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஜூன் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அன்றைய தினம் தான் நடிகர் விஜயின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...