பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி வெளியான ‘காலா’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக படம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் படங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஓபனிங் கூட இப்படத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரஜினி படங்கள் வெற்றிப் பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானதில்லை. ஆனால், முதன் முறையாக ‘காலா’ படத்தை மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கலாய்த்து வருவது ரஜினி ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.
இந்த நிலையில், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினிகாந்தின் ‘2.0’ இந்த ஆண்டு வெளியாகாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மேலும் சோகமாக்கியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ரஜினிகாந்தே ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார். இப்படி ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிப்பதும் அதை மாற்றுவதும் என்று ‘2.0’ நிலை இருக்க, தற்போது படம் இந்த ஆண்டு வெளியாகாது என்றும், அடுத்த ஆண்டு (2019) தொடக்கத்தில் வெளியாகலாம் என்றும், மும்பை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் ஏகப்பட்ட காட்சிகளுக்கு விஷுல் எபெக்ட்ஸ் செய்ய வேண்டி உள்ளதால் தான் இவ்வளவு தாமதாமாகிறதாம். ஹாலிவுட் படத்திற்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும், என்று இயக்குநர் ஷங்கர் விரும்புகிறாராம், அதனால் தான் காலதாமதமாகிறதாம். அத்துடன் படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...