ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நாசரின் மனைவி வேடத்தில் நடித்தவர் லாவண்யா. அப்படத்தை தொடர்ந்து தெனாலி, சேது, கண்ணால் பேசவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக சீரியலில் பிஸியாக நடித்து வந்தார்.
தற்போது சீரியலுக்கு பிரேக் கொடுத்திருப்பவர், திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய லாவண்யா, பல டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து வந்த திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் லாவண்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ”விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறியிருக்கிறார்.
அப்படியானால் லாவண்யாவுக்கு விரைவில் டும்...டும்...டும்...தான்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...