’காலா’வில் செல்வி என்ற ரஜினியின் மனைவியாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவின் நடிப்பு குறித்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அதிலும் ஆரம்ப காட்சியில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நீளமான வசனம் பேசும் காட்சியில் அவர் நடித்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
‘காலா’ படத்திற்குப் பிறகு ஈஸ்வரி ராவ் மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று பல பிரபலங்கள் கூறி வரும் நிலையில், தற்போது அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம்.
இந்த நிலையில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் பாலா இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ள ‘வர்மா’ படத்தில் ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘வர்மா’ என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...