தமிழ் சினிமாவில் வெளியான, தற்போதும் வெளியாகி கொண்டிருக்கும் திகில் படங்களின் வரிசையில் என்றுமே மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த படமாக திகழ்வது ‘யார்’. கலைப்புலி எஸ்.தாணுவின் முதல் தயாரிப்பான இப்படத்தை இயக்கியவர் கண்ணன். ‘யார்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ‘யார்’ கண்ணன், என்ற பெயரில் பல திரைப்படங்களை இயக்கினார்.
இயக்குநராக மட்டும் இன்றி நல்ல பாடலாசிரியராகவும் வலம் வந்த இவரது வரிகளில் உருவான “அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா சொல்லித் தந்த பூமி தந்தையல்லவா..” என்ற பாடல் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.
இயக்குநர், பாடலாசிரியர் என்று சினிமாவில் பயணித்தவர், தற்போது நடிகராகவும் தனது பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருப்பவர் தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.
யார் கண்ணன் - ஜீவா தம்பதியின் வளர்ப்பு மகள் காயத்திரி. இவர் தான் தற்போது ஹீரோயினாக களம் இறங்க தயாராகிவிட்டார். சினிமா விழாக்களில் தனது பெற்றோருடன் கலந்துக் கொண்ட காயத்ரியை, பார்ப்பவர்கள், யார் இவர் நடிகையா? என்று கேட்பார்களாம். இப்படி போகும் இடமெல்லாம் தன்னை நடிகை என்று பலர் நினைப்பதால், நிஜமாகவே நடிகையாக ஆனால் எண்ண!, என்று யோசித்த காயத்ரி, ஹீரோயினாக நடிக்க ரெடியாகிவிட்டார்.
அப்பா யார் கண்ணன் இயக்குநர், அம்மா ஜீவா நடன இயக்குநர் என்பதால், நடிப்பு மற்றும் நடனம் தெரிந்த, தமிழ் பேசும் அழகானவராக இருப்பதால் கோடம்பாக்க ஹீரோயின்களின் பட்டியலில் காயத்ரி பெயர் இடம்பெறுவது நிச்சயம்.
இருந்தாலும், வாய்ப்பு வந்தால் போதும், என்று இல்லாமல், நல்ல பட நிறுவனம், நல்ல டீம் இருந்தால், மட்டுமே நாளைக்கே மேக்கப் போட தயார் என்று கூறும் காயத்ரி, கோடம்பாக்கத்தில் எண்ட்ரியாகும் போதே தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளார்.
ஆம், இன்று தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் பல முன்னணி நடிகைகளை புகைப்படம் எடுத்த ஸ்டில்ஸ் ரவியை வைத்தே தனது முதல் போட்டோ சூட்டை நடத்தியுள்ளவர், தான் நடிகையாவது உறுதி என்பதை தனது போட்டோ மூலமாகவே கோடம்பாக்கத்திற்கு புத்திசாலித்தனமாக தெரியப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகையாக வரும் காயத்ரியை சினிமாஇன்பாக்ஸ் சார்பில் வெல்கம் பண்ணுவோம்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...