கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ மாபெரும் வெற்றி பெற்றது. தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கும்கி 2’ என்ற தலைப்பில் பிரபு சாலமன் இயக்கி வருகிறார்.
மதியழகன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, சூசன், கோலங்கள் திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.
இப்படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்கு பிரபு சாலமன் தயாரிகி வருகிறார்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். புவன் எடிட்டிங் செய்ய, தென்னரசு கலையை நிர்மாணிக்கிறார். பிரபாகரன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, பென் இந்தியா லிமிடெட் சார்பில் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
படம் குறித்து பிரபு சாலமன் கூறுகையில், “நிறைய படங்களில் முதல் பாகத்தின் கதை தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கும்கி படத்திற்கும், கும்கி 2 படத்திற்கும் கதையளவில் எந்த சம்மந்தமும் இல்லை. யானை சம்மந்தப் பட்ட கதை என்பதால் இதற்கும் கும்கி என்ற தலைப்பை தொடவேண்டி இருக்கிறது.
கும்கி 2 பிரமாண்டமான ஒரு படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல் தான் கும்கி 2.
குட்டி யானைக்காக இந்தியா, ஸ்ரீலங்கா, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான இடங்களில் அலைந்து திரிந்தோம், யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கல, பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்க வில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்து இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக இந்த கும்கி 2 இருக்கும்.
வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கும்.” என்றார்.
‘கும்கி 2’ படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் பென் இந்தியா லிமிடெட் மாபெறும் வெற்றி பெற்ற ‘சிங்கம் 3’, ‘மெர்க்குரி’ மற்றும் தயாரிப்பில் இருக்கும் விஷாலின் ‘சண்டக்கோழி 2’ பட தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...