ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி, 50 வயதானாலும் ஆர்யாவுக்காக காத்திருப்பேன், வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன், என்று பிடிவாதமாக இருக்கிறார்.
ஆர்யாவின் காதலியான அவர் தற்போது ஜி.வி.பிரகாஷின் ஹீரோயினாகிவிட்டார். வசந்த பாலன் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அவருக்கு, மேலும் பல சினிமா வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். ஆனால், முதல் படத்தின் ரிலிஸிற்கு பிறகே மற்ற படங்களில் நடிப்பேன், என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அபரணதிக்கு அழைப்பு வந்ததாம். ஆனால், அதை அவர் நிராகரித்து விட்டாராம்.
எதற்காக பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்தீர்கள் என்றதற்கு, “நானே சமைத்து சாப்பிடுவதெல்லாம் எனக்கு செட்டாகாது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியே எனக்கு ஒத்துவராத நிகழ்ச்சி, அதனால தான் நிராககரிச்சுட்டேன்.” என்று சொல்கிறார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...