ஈழத்தில் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் அவ்வபோது குரல் எழும்பிக் கொண்டிருந்தாலும், இந்திய தேசத்தின் பிற மாநில திரையுலகம் என்னமோ, “தங்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி...” என்ற நிலையில் தான் இருந்து வருகின்றன. ஆனால், இதை மற்றும் விதத்தில் முதல் முறையாக தமிழ் சினிமா அல்லாத பிற மொழி சினிமா நடிகராக அறியப்பட்ட மஞ்சு மனோஜ், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான படம் ஒன்றில் நடித்துள்ளார்.
‘நான் திரும்ப வருவேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. அஜய் அண்ட்ரூஸ் நுதக்கி இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சு மனோஜ் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக திகழ்ந்து, பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்த மோகன் பாபுவின் மகன் தான் மஞ்சு மனோஜ்.
ஈழத் தமிழர்கள் எதிர்க்கொண்ட பிரச்சினைகள், அனுபவித்த கொடுமைகள் பற்றி பல படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், இதுவரை சொல்லப்படாத சம்பவங்களை உணர்ச்சிபொங்க, ஒரிஜனால இப்படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.
தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த உங்களுக்கு எப்படி தமிழர்கள் பிரச்சினை குறித்து படம் எடுக்க தோன்றியது, என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, தமிழர்கள் தான் என்றாலும் அவர்கள் இந்தியர்கள் தான். இந்தியாவில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது, அவை மற்ற மக்களையும் பாதிக்கும். இதை உணர்த்துவதற்கே இந்த படத்தை எடுத்திருக்கிறேன். மேலும், ஏற்கனவே ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழியாக அகதிகளாக வரும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ‘ராவண தேசம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை நான் இயக்கியிருக்கிறேன். அப்போதில் இருந்தே விடுதலை புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களைப் பற்றி படம் எடுக்க நினைத்திருந்தேன், என்றார்.
ஈழத் தமிழர்கள் குறித்து படம் எடுத்தால் சென்சார் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்குமே, என்று கேட்டதற்கு, “தெரியும் சார், அதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த படத்தை நாங்கள் இயக்கியிருக்கிறோம். ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலை புலிகள் பற்றிய படமாக இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாமல், விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த படத்தை காட்சிப்படுத்தியிருக்கிறோம். எந்தவித சர்ச்சையையும் உருவாக்காமல், திரையரங்கில் வெளியாகும்படி காட்சிகள் அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்திருக்கிறோம். அதனால், எந்த வித பிரச்சினையும் வராது என்று நம்புகிறோம், என்ற ஹீரோ மஞ்சு மனோஜ், என் அப்பா தமிழகத்தில் தான் வளர்ந்தார், இங்கு தான் அவர் நடிகரானார். நானும் தமிழகத்தில் சாப்பிட்டு இருக்கிறேன், அந்த நன்றிக்கடனுக்காக தமிழர்களுக்கு ஆதரவாக இப்படத்தில் நடித்திருக்கிறேன், என்றும் கூறினார்.
கல்லூரி மாணவர் மற்றும் போராட்டக் குழு தலைவர் என்று இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ள மஞ்சு மனோஜ், இந்த படத்திற்காக 20 கிலோ உடல் எடையை கூட்டியும், அதே சமயம் உடல் எடையை குறைத்தும் நடித்திருக்கிறார்.
நேற்று வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, மிகவும் ஆக்ரோஷமான முறையிலும் உள்ளது.
‘டி2’ பட புகழ் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நகுல் நாயகனாக நடிக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’...
அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய், விரைவில் அரசியல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு தனது படத்தின் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...