கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் ‘பிக் பாஸ் 2’ வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பவர்கள் யார்? என்ற பெரும் கேள்வி மக்கள் மனதில் நிலைக்கொண்டிருக்கும் நிலையில், சில பட்டியல்களும் சமூக வலைதளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கின்றன.
இதுவரை போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், சில நடிகை நடிகர்கள் போட்டியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் கசிந்துக்கொண்டு இருக்கின்றது. அதில் ஒருவர் தான் சினேகா.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் நடிகை சினேகா, ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியி பங்கேற்க இருப்பதாக பல மாதங்களாக தகவல் கசிந்துக் கொண்டு இருக்கின்றது. அவரும் ஜிம், உடற்பயிற்சி என்று தன்னை தயாரிப்படுத்தி வருவதால், நிச்சயம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றே பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து பேசியிருக்கும் சினேகா, பிக் பாஸ் போட்டியில் தான் பங்கேற்கவில்லை என்று அறிவித்திருக்கிறார்.
”பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது உண்மை இல்லை. அந்த தகவலை செய்தியாக வெளியிடுவதற்கு முன்பாக என்னிடம் கேட்டிருக்கலாம். தற்போது நான் இருக்கும் இடத்தில் சந்தோஷமாகவே இருக்கிறேன்.” என்று சினேகா கூறியுள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...