ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்றால் அது விஜய் தான். ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் விஜயின் மெர்சல் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 62’ என்று அழைக்கப்படும் இப்படத்திற்குப் பிறகு விஜய் படத்தை இயக்கும் இயக்குநர் யாராக இருப்பார், என்பதிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன், விஜயுடன் இணைந்து பணியாற்ற காத்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே ‘யோகன் அத்தியாசம் ஒன்று’ என்ற தலைப்பில் விஜயை வைத்து கவுதம் மேனன் ஒரு படத்தை இயக்க இருந்தார். அப்படத்திற்கான போஸ்டர் கூட வெளியான நிலையில், திடீரென்று அப்படம் கைவிடப்பட்டு விட்டது.
தற்போது விஜய்க்காக தான் காத்திருப்பதாக கூறியிருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், “"விஜய் சாரோட படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஒருமுறை நான் அவரிடம் கதை சொன்னேன். 'இது வேண்டாம்.. வேற மாதிரி ஏதாவது படம் பண்ணுவோம்' என அவர் கூறினார். அதன் பிறகு மூன்று முறை சந்தித்துள்ளோம். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்குறேன். அப்படி கிடைத்தால் அது லவ் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...