மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்வேதா மேனன், தமிழில் ‘நான் அவன் இல்லை 2’, ‘அரவாண்’, ‘துணை முதல்வர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் மலையாளம் மட்டும் இன்றி சில இந்திப் படங்களிலும் நடித்து வரும் ஸ்வேதா மேனன், தற்போது படப்பிடிப்பு ஒன்றுக்காக மும்பையில் முகாமிட்டுள்ள நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மலையாள திரையுலக நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) தேர்தல் விரைவில் வர உள்ளது. இதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறையில் புகார் அளித்த ஸ்வேதா மேனன், “நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன். தற்போது செயற்குழு பதவிக்கு போட்டியிடுகிறேன். இதற்கு முன்பாக பல நடிகைகள் சங்கத்தில் பொறுப்பில் இருந்துள்ளார்கள். இந்த மிரட்டலுக்கு நான் அஞ்சப்போவதில்லை.’ என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...