தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி, விஷால் பாணியில் சமீபத்தில் காட்டிய அதிரடிக்காக, தற்போது நெட்டிசன்களின் கலாய்த்தலுக்கு ஆளாகியிருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை, வரலட்சுமியின் கேரவன் டிரைவர் ஆன்லைனில் பார்த்தாராம். அதை கண்ட வரலட்சுமி, அவரை தொடர்ந்து படம் பார்க்க தடுத்ததுடன், லெப்ட்...ரைட்டும், வாங்கிவிட்டாராம்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் வரலட்சுமி, படங்கள் மூலம் பிழைப்பு நடத்துவபவர்களே இப்படி என்றால், மற்றவர்களை சொல்லவா வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமியின் இந்த டிவீட்டுக்கு பதில் அளித்துள்ள பல நெட்டிசன்கள் அவரை கலாய்க்கும் விதமாக ட்வீட்டி வருகிறார்கள். அதில் ஒருவர், ”அவன் பாவம் கேரவன் ஓட்டி பொழப்பு நடத்துறான். அவன்ட உன் வீர வெங்காயத்த காட்டாத, தைரியம் இருந்தா Tamil Rockers புடி. ஓடவிட்டு அடிச்சி விட்ருவான்” என்று கமெட்ன் போட்டுள்ளார்.
மற்றொருவர், இன்று டிக்கெட் விலை, பார்க்கிங், ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் என ஒரு படத்திற்கு ரூ. 500 செலவு, அதனால் ஆன்லைனில் பார்க்கிறார், என்று அதை நியாயப்படுத்தி கமெண்ட் போட்டுள்ளார்.
சினிமா உலகிற்கு நல்லது செய்த வரலட்சுமியை, தற்போது நெட்டிசன்கள் வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...