முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பல குரல் மன்னன் நவீன். இவர் ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகியதை மறைத்து, தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்கின்றார் என்று கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொறுளாக மாறியுள்ள நவீன் விவகாரம், தற்போது செய்தியாகவும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஆனால், நவீன் தனது திருமண விவகாரம் குறித்து மறுத்ததுடன், தன் மீது வேண்டும் என்றே பழி சுமத்துகிறார்கள், என்று கூறியுள்ளார்.
அதே சமயம், திவ்யலட்சுமி என்பவர், தனக்கும் நவீனுக்கும் திருமணம் நடந்தது உண்மை தான், தற்போது இரண்டாவது திருமணத்திற்காக என்னிடம் அவர் பேரம் பேசுகிறார். கோடி ரூபாய் கொடுத்தாலும் அவரை நான் விவாகரத்து செய்ய மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.
திவ்யலட்சுமியின் ஸ்டேட்மெண்டால் நவீனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், திவ்யலட்சுமியால் தனது குடும்பம் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறது, இதை சட்டப்படி நான் சந்திப்பேன், என்று நவீன் இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...