‘காலா’ வை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்காக வட இந்தியாவில் முகாமிட்டுள்ள அவர் தற்போது பெரும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
‘காலா’ விமர்சன ரீதியாகவும், மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் திருப்தியான படமாகவே அமைந்திருக்கிறது. ஆனால், படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்று சினிமா வட்டாரத்திலே பேசப்படுகிறது. சென்னையை தவிர்த்த சில மாவட்டங்களில் வசூல் பெரிய அளவில் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கு காரணம் படத்தை சரியான முறையில் புரோமோஷன் பண்ணாதது தான் என்றும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தாணு அளவிற்கு தனுஷ் படத்தை முறையாக புரோமோஷன் செய்யாததாலேயே, படத்தின் வசூல் பல இடங்களில் பின் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பெரும் கோபத்தில் இருக்கும் ரஜினிகாந்த், தனுஷிடம் கூட கோபித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...