‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக இருந்த இவர், திடீரென்று சினிமாவை விட்டு ஒதுங்கி, தொழில் செய்து வந்த போது, உடல் பருத்து ஆளே மாறிப்போயிருந்தார். ஆனால், தற்போது பழைய அரவிந்த்சாமியாக பிட்டாக இருக்கிறார்.
இந்த நிலையில், தனது உடல் எடை அதிகரித்து தான் குண்டாக இருந்த போது இலங்கையில் தனக்கு ஏற்பட்ட அவமான சம்பவம் ஒன்றைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறி அரவிந்த்சாமி ரொம்பவே வருத்தப்பட்டார்.
அதாவது, குண்டாக இருந்த போது அரவிந்த்சாமி தனது குழந்தைகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தாராம். அப்போது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர், அவரது மகளிடம் ”உன் ப்பாவை கொஞ்சமாக சாப்பிட சொல்லு” என்றாராம்.
இந்த சம்பவத்தால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், தனது மகள் சிறியவள், அவளுக்கு எப்படி இருந்திருக்கும், என்று கூறும் அரவிந்த்சாமி, தற்போதும் அந்த சம்பவத்தை மறக்க முடியாது, என்று தெரிவித்திருக்கிறார்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...