ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, தற்போது சர்ச்சை இயக்குநருடன் கைகோர்த்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ‘லட்சுமி’ என்ற குறும்படம் வெளியாகி பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்காதலை நியாயப்படுத்துவது போல அமைந்திருந்த இந்த குறும்படத்திற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட குறும்படம் என்ற பெருமை இந்த படத்திற்கு கிடைத்தது.
இந்த குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் என்பவர், தற்போது நயந்தாராவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாருகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இது ஹாரார் திரைப்படமாக உருவாக உள்ளது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...