சினிமாவில் வாய்ப்பில்லாத, ஓரம் கட்டப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு விஜய் டிவி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சொத்தையாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சி தான் தற்போது அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நம்பர் ஒன்.
டிவி பார்க்காதவர்கள் கூட இரவு 9 மணி ஆனவுடன் விஜய் டிவி பார்க்க தொடங்கி விட்டார்கள். அதற்கு காரணம், இதில் பங்கேற்பவர்களின் நடிப்பு கலந்த வாழ்க்கை தான்.
இப்போட்டி தொடக்கத்தில் என்ன கட்டிபிடிக்க ஆளே இல்ல, என்று கூறி பரபரப்பை தொடங்கிய ஜூலி, பிறகு ரசிகர்களை கடுப்பேற்றுவதில் முதலிடத்தை பிடித்தார். அவரைத் தொடர்ந்து போட்டியில் பரபரப்பை உருவாக்கும் நபராக உருவெடுத்த ஓவியா, காதல், தற்கொலை என்று பல நாட்கள் போட்டியை இண்டர்ஸ்டிங்காக கொண்டு சென்றாலும், நாளடைவில் போட்டிக்கே ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டார். அதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரியாகியிருப்பவர்களில் சுஜா வாருணியும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகையாக இருந்தாலும், சுஜா வாருணி என்றால் யார்? என்று ரசிகர்கள் கேட்கும் நிலையில் தான் அவர் இருக்கிறார். அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு என்றால் சும்மா இருப்பாரா?, வாங்கின காசுக்கு ரொம்பவே அதிகமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனைவரிடமும் சண்டை போடுவது, பேசியதையே திரும்ப திரும்ப பேசுவது என்று நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்த அவர் செய்யும் அனைத்தும் செயற்கையாக இருப்பதால், அவரைப் பார்க்கும் ரசிகர்கள் வாந்தி எடுக்காத குறையாக அவர் மீது கடுப்பாகிறார்கள்.
சுஜா வாருணி ஓவரா பண்ராங்களே, வாங்கிய காசுக்கு அதிகமாக நடிக்கிறாங்களே, என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களில் சிலர், சுஜாவுக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...