நடிக்கவே தெரியாது என்றாலும் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் நடிக்கும் காமெடி காட்சிகளைப் பார்த்தால் நமக்கு சிரிப்பு வராது என்றாலும் இவரை கோடம்பாக்கம் காமெடி நடிகராக கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், விஜய் டிவியில் வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ் 2’ வில் பவர் ஸ்டார் பங்கேற்கப் போகிறாராம். இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவுக்கும், பவர் ஸ்டாருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறதாம். இன்னும் இரண்டு நாட்களில் அக்ரிமெண்டில் கையெழுத்து போடப்போகிறாராம்.
எதற்காக பிக் பாஸில் பங்கேற்கிறீர்கள்? என்றதற்கு, “அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால் பப்ளிசிடி கிடைக்கும், அது எனது கேரியருக்கு நல்லா இருக்கும்” என்று அப்பாவித்தனமாக கூறும் பவர் ஸ்டார் ‘முருங்கைக்காய்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...