‘காலா’ வில் ரஜினியின் மகனாக நடித்து பாராட்டுப் பெற்றிருக்கும் திலீபன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘குத்தூசி’. இயற்கை விவசாயத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில், இயக்குநர் சீனு ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசைத்தகடை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சீனு ராமசாமி, “தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன் அப்பாவை அப்பா என்று அழைத்தால் ”ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறேன், ஒழுங்காக டாடி என்று கூப்பிடு” என்று மகனை கண்டிக்கிறார் தந்தை. இந்த சூழலில் இந்த படத்தில் கதாநாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. பேயையும் பிசாசையும் மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில் விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது.” என்றார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...