பெண் பத்திரிகையாளரை அவதூராக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யுமாறு பத்திரிகையாளர்கள் பலர் போலீசில் புகார் அளித்துள்ளதோடு, வழக்கும் தொடர்ந்துள்ளனர். முன் ஜாமீனுக்காக எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும், அவரை கைது செய்ய தடை இல்லை, என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இருந்தாலும் இதுவரை அவரை தமிழக போலீசார் கைது செய்யவில்லை.
எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம், அவரது உறவினர் கிரிஜா வைத்யநாதன், தலைமை செயலாளராக இருப்பது தான் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எஸ்.வி.சேகரை போலீஸார் கைது செய்யாதது குறித்து, அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளரும் திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், முன்னணி வார இதழின் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “சட்டம் தன் கடமையைச் செய்யும். அவர் நிச்சயம் கைதாவார். அதுக்கு முன் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியவர் எப்படிப்பட்டவர் என்பதை என் அனுபவத்துல ஓர் உதாரணம் சொல்றேன். முரளி, லைலா நடித்து நான் இயக்கிய `காமராசு' படத்துல வடிவேலுவுக்குப் பதிலா முதல்ல எஸ்.வி.சேகரைத்தான் கமிட் பண்ணியிருந்தேன். சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவருக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைச்சேன். நாகர்கோவில்ல ஷூட்டிங் போன இடத்துல அவர் செய்த சேட்டைகள் வெளியில் சொல்ல முடியாதவை. ஒரு கட்டத்துல கடுப்பாகித்தான் அவருக்குப் பதில் அந்தக் கேரக்டருக்கு வடிவேலுவை புக் செய்தேன்.
இது அம்மா ஜெயலலிதா ஆசியில நடக்கிற ஆட்சி. தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் எவ்ளோ பெரிய இடத்துல இருந்தாலும், தூக்கி வீசப்படுவாங்க. அப்படிப்பட்டவருக்கு எதுக்கு நாங்க முட்டுக் கொடுக்கணும்? அவரைக் கைது செய்யாததால அரசுக்கு உண்டாகியிருக்கும் அவப்பெயரைத் துடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சி ஆளா சொல்றேன், நிச்சயம் அவர் கைது செய்யப்படுவார்!'' என்று தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...