தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைக்கான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், பென்ஸ் உள்ளிட்ட விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணிப்பதோடு, சென்னையில் அரண்மனை போன்ற பிரம்மாண்ட வீட்டில் வசிப்பது என்று ராணி போல வாழ்ந்து வருபவர் ராய் லட்சுமி.
தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக இவர் நடித்தாலும் எந்த படமும் வெற்றிபெறவில்லை. இதற்கிடையே நடன இயக்குநரின் படம் ஒன்றில் குத்தாட்டம் போட்டவர், அப்படத்திற்குப் பிறகு தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாததால், இந்தி படம் ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்தார். அந்த படமும் பெரிய அளவில் போகாததால், தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை மட்டும் வேலையாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், தனது தோழியின் பிறந்த நாள் விழாவுக்காக மதுபான விடுதி ஒன்றில் ராய் லட்சுமி குத்தாட்டம் போட்டிருக்கிறார். அவர் போட்ட குத்தாட்டத்தால் அந்த மதுபான விடுதியில் இருந்தவர்களின் ஒட்டு மொத்த கவனமும் அவர் மீது தான் திரும்பியதாம்.
தற்போது, தெலுங்கு மற்றும் கன்னடம் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி, தமிழில் வாய்ப்பு தேட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...