‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சாயீஷா சய்கல் தான், தற்போதைய தமிழ் சினிமா ஹீரோக்களின் பேவரைட்டாக உள்ளார்.
இவர் நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளியாகியிருந்தாலும், தற்போது இவர் கையில் சுமார் 5 க்கும் மேற்பட்ட படங்கள் இருப்பதோடு, இவர் நடிப்பில் விரைவில் பல படங்கள் வெளியாக உள்ளது. முன்னணி ஹீரோக்கள் பலரும் தங்களது படங்களில் சாயீஷாவை ஹீரோயினாக்கவே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் இவர் அழகாக இருப்பதோடு, அழகாக நடனமும் ஆடுவது தான். இவரது நடனத்தைப் பார்த்து பிரபு தேவாவே மிரண்டு போய் இவரை பாராட்டியுள்ளார். அதுமட்டும் இன்றி, கவர்ச்சியிலும் அம்மணி தாராளம் காட்டுவதால் ஹீரோக்கள் பலர் தங்களது தயாரிப்பாளர்களிடம் இவரை தான் கைகாட்டுகிறார்களாம்.
குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் இடத்தைப் பிடித்திருக்கும் சாயீஷாவின் வளர்ச்சி சில ஹீரோயின்களை கடுப்பாக்கியிருப்பது போல, லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நயந்தாரவையே சற்று ஆட்டம் காண வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வயது ஏறிக்கொண்டே போனாலும், நயனின் மவுசு மட்டும் குறையாமல் இருந்த நிலையில், சாயிஷாவின் வளர்ச்சியால் நயந்தாராவுக்கான மவுசு குறைய தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...