தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தனக்கு என்று தனி பாதையை வகுத்துக்கொண்டு பயணிப்பவர். ரசிகர்களும், மன்றங்களும் தேவையில்லை, என்று அவர் அறிவித்த போது, அவருக்காக எதையும் செய்ய அவரது ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இயக்குநர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். என்னதான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், பொழுதுபோக்கிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருபவர், பைக், கார், ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது பொழுதுபோக்கை மாற்றிக் கொண்டு வந்த அஜித், தற்போது புதிய பொழுதுபோக்கு ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆம், அஜித் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். அவரது புதிய பொழுதுபோக்கு தான் இந்த துப்பாக்கி சுடுதல், படப்பிடிப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் தினமும் மாலை நேரத்தில் துப்பாக்கி சுடுவதில் பிஸியாகிவிடுகிறாராம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...