நாளை மறுநாள் (ஜூன் 17) மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது. இதில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து வரும் நிலையில், முதல் சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, பிக் பாஸ் முதல் சீசனில் மக்களிடம் அதிகமாக திட்டு வாங்கியதோடு, நெட்டிசன்களின் கலாய்ச்சலுக்கும் ஆளான காயத்ரி ரகுராம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தான் பலியாடுகள், என்று கோபமாக கூறியுள்ளார்.
இரண்டாவது சீசனுக்கு அழைப்பு வந்ததா? என்று அவரிடம் கேட்டதற்கு, “முதல் சீசனையே தாங்க முடியல, இதுல இரண்டாவது சீசனா? வேணவே வேணாம்” என்று கூறியவர், ”இன்னொருமுறை என் பேரை டேமேஜ் பண்ணிக்க விரும்பலை. அந்த வீட்டுக்குள்ளே நான் நானாக இருக்கவே முடியாது.
போன சீசனில் பப்ளிசிட்டிக்காக சிலர் செய்த செயல்கள் ரொம்ப மோசமா இருந்துச்சு. அந்த வீட்டுக்குள்ளே நிஜமாகவே நடந்தது என்னனு எங்களுக்குத்தான் தெரியும். மக்களுக்குத் தெரியாது. அந்த நிகழ்ச்சி, யாருக்கும் எந்தப் பாடத்தையும் கத்துக்கொடுக்கப் போறதில்லை. போட்டியாளர்களும் ஆடியன்ஸும்தான் பலியாடுகள். இதை அனுபவத்தில் சொல்றேன்.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...