UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் "சாஹூ".
ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் "சாஹூ" படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்டமான ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்துவருகிறார்.
பிரபாஸ் தனது படங்களில் தனது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெட்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொருக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது "சாஹூ".
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...