Latest News :

’பிக் பாஸ் 2’ - வில் முரட்டு குத்து நடிகை!
Friday June-15 2018

கடந்த மாதம் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ஒட்டு மொத்த மக்களின் கோபத்திற்கு இப்படக்குழு ஆளானாலும், படத்தை தயாரித்தவர் என்னவோ பல கோடிகளை லாபமாக பார்த்துவிட்டார்.

 

படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு இளைஞர்களின் ஆதரவும் இருந்ததால், இந்த ஆபாச படம் ஆடியன்ஸுக்கு பிடித்த படமாகிவிட்டது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவரை விட, காமெடியனுக்கு ஜோடியாக நடித்த யஷிகா ஆனந்த், என்பவர் தான் அதிகப்படியான ஆபாச காட்சிகளிலும், ஆபாச வசனங்கள் பேசியும் நடித்திருந்தார்.

 

அந்த யஷிகா ஆனந்த் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ரொம்பவே கவர்ச்சியானவர் தான். தான் கலந்துக்கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் கூட ஆபாசமாக உடை அணிந்து வரும் இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உண்டு.

 

விஷயம் என்னவென்றால், விரைவில் ஒளிபரப்பாக உள்ள தமிழ் பிக் பாஸ் சீசன் 2 -வில் யஷிகா ஆனந்தும் ஒரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் போகப்போகிறாராம். இதுவரை வெளிவராத இந்த தகவல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக் இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் இருப்பதால், இது நம்பத்துகுந்த தகவலாகவே கருதப்படுகிறது.

Related News

2814

சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை - ‘ட்ராமா’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
Thursday March-13 2025

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!
Thursday March-13 2025

ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

Recent Gallery