ஒரு காலத்தில் கேரளாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. இவரது ஆபாசப் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால், மம்மூட்டி, மோகன்லால் போன்ற முன்னணி ஹீரோக்களே தங்களது படங்களில் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்வார்கள். அந்த அளவுக்கு கேரள மக்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் ஷகிலா.
இதற்கிடையே, ஷகிலாவின் வளர்ச்சியால் நொந்துப்போன மலையாள நடிகர்கள் அவரது படங்களை முடக்க வேண்டும் என்ற முடிவு எடுத்தனது. அதை தொடர்ந்து அரசின் உதவியோடு ஷகிலா உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகளின் ஆபாச படங்களுக்கு கேரள அரசு தடை விதித்தது. இதனால் கேரளாவில் இருந்து வெளியேறிய ஷகிலா, தனது சொந்த ஊரான சென்னையிலேயே செட்டிலாகி, சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், ’சீலாவதி’ என்ற தெலுங்குப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் ஷகிலா நடித்திருக்கிறார். அப்படத்தில் பழைய ஷகிலாவைப் போல சற்று கவர்ச்சியாகவும் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
கேரளாவில் நடந்த உண்மை சம்பவங்கள் சிலவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திகில் படமான இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுப்பு தெரிவித்ததோடு, படத்திற்கு தடையும் விதித்துள்ளது. படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை ரொம்பவே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ஷகிலா, தணிக்கை குழுவின் முடிவால் அதிர்ச்சியடைந்ததோடு, ”படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழு படத்திற்கு தடை விதித்திருக்கிறது. ஆனால், இந்த படத்திற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.” என்று தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...