ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நேரடி அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், கமல்ஹாசன் மட்டுமே தனது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் எப்போதும் போல அரசியல் ஈடுபாட்டில் ஆமைப் போலவே நகர்வதோடு, அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், கமல், ரஜினி ஆகியோருடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்ரீப்ரியா, ரஜினிகாந்த் அறிவான தலைவர் அல்ல, என்று அவரை விமர்சித்திருக்கிறார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. அந்த நிகழ்ச்சி குறித்து பிரபல வாரத இதழியின் இணையதளம் ஸ்ரீப்ரியாவிடம் கருத்து கேட்டது. அப்போது, ”கமலுக்கு ஆதரவு கொடுத்த நீங்க, ரஜினிக்கு ஏன் கொடுக்கலை?” என்ற கேள்வியை கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த ஸ்ரீப்ரியா, “எனக்குத் தேவை அறிவான தலைவர். முடிவுகளை சரியா, துரிதமா எடுக்கிறவங்கதான் நல்ல தலைவரா வர முடியும். என் தலைவர் நாற்பது வருடமா உட்கார்ந்து அரசியலுக்கு வரலாமா வேணாமானு யோசிக்கலை. முடிவு பண்ணார், அரசியலுக்கு வந்தார். மத்தபடி, நட்புரீதியா எனக்கு இரண்டு பேருமே நல்ல நண்பர்கள் தான். அரசியல்னு வந்துட்டா, என் சாய்ஸ் கமல் தான்.” என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் அறிவற்றவர், என்று ஸ்ரீப்ரியா நேரடியாக சொல்லவில்லை என்றாலும், மறைமுகமாக அவர் ரஜினியை அறிவற்ற தலைவர் என்றே சொல்லியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...