கடந்த பல மாதங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நிதயா இடையே நடந்த குடும்ப சண்டையும் ஒன்று.
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் தாடி பாலாஜி, சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தாடி பாலாஜியின் மனைவி நித்யா, தனது கணவன் தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக புகார் கூறியதோடு, போலீசிலும் புகார் அளித்தார். பதிலு தாடி பாலாஜியும் தனது மனைவி மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறினார்.
ஒரு கட்டத்தில், தாடி பாலாஜி நித்யாவையும், அவரது குழந்தையையும் கொடுமை படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வலுத்துக்கொண்டே சென்ற இந்த சம்பவத்தில் காவல் துறை தலையிட்டு இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிரிந்தவர்கள் மீண்டு, ஒன்று சேரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது வாழ்க்கையில் அல்ல, டிவி நிகழ்ச்சி ஒன்றுக்காக.
நாளை தொடங்க இருக்கும் பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் தாடி பாலஜியும் அவரது மனைவி நித்யாவும் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிந்து வாழும் இவர்கள் ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஒன்றாக 100 நாட்கள் வசிக்கப் போகிறார்கள். இது நிகழ்ச்சிக்கு கூடுதல் பரபரப்பை கொடுக்கும் என்றும் பேசப்படுகிறது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...