தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த சிமரன், தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, அவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், சில புகைப்படங்களும் வைரலாக பரவியது.
இந்த நிலையில், பிக் பாஸ் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள சிம்ரன், தான் எந்த டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் கூறிய அவர், ”சில ஷோக்களில் நான் பங்கேற்க போவதாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது. போட்டோஷாப் மூலம் மார்ப் செய்யப்பட்ட போட்டோக்கள் ஒரு குட் ஜாப். எனது அறிவுக்கு எட்டியபடி, சமீபத்தில் எந்த டிவி நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை. சமீபத்திய வருங்காலத்தில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க போவதுமில்லை. தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...