தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களாகட்டும், அறிமுக ஹீரோக்களின் படங்களாகட்டும் அனைத்துப் படங்களிலும் யோகி பாபு நிச்சயமாக இருப்பார்.
இந்த நிலையில், யோகி பாபுவை ஹீரோவாக்க இயக்குநர் ஒருவர் முயற்சி செய்தாராம். அதற்கான கதையை அவர் யோகி பாபுவிடம் சொல்லி, நீங்க தான் ஹீரோ, என்றாராம். அதற்கு மறுப்பு தெரிவித்த யோகி பாபு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோவாக நடிக்க மாட்டேன், எதாவது காமெடி வேடம் இருந்தா சொல்லுங்க, நடித்துக் கொடுக்கிறேன், என்று கூறி இயக்குநரை அனுப்பி வைத்தாராம்.
முன்னணி காமெடியனாக இருந்த சந்தானம், இனி ஒன்லி ஹீரோவகத்தான் நடிப்பேன் என்ற முடிவு எடுத்தப் பிறகு அவர் இடத்தை சூரி பிடித்தார். சூரியையும் சிலர் ஹீரோவாக்க முயன்றார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டாலும், தற்போது சூரியை பின்னுக்கு தள்ளிவிட்டு யோகி பாபு முதலிடத்தை பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...