மக்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 2 நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்ட பலர், பிக் பாஸ் இரண்டாம் பாகத்தின் போட்டியாளர்களுக்கு சில டிப்ஸ்களை கொடுத்து வருகிறார்கள்.
அதே சமயம், பிக் பாஸ் இரண்டாம் பாகத்தின் போட்டியாளர்கள் யார் யார், என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், பவர் ஸ்டார், மும்தாஜ் உள்ளிட்ட சிலர் கலந்துக்கொள்ளப் போவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸின் முன்னாள் போட்டியாளர் சினேகன், விரைவில் ஒரு யூடியூப் சேனல் தொடங்க இருக்கிறாராம். ‘பொம்மி வீரன்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அப்படத்தின் ரீரெக்கார்டிங்கில் பிஸியாக இருக்கிறார். மேலும், மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் வந்திருக்கிறதாம்.
விரைவில், தான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் விபரங்களை அறிவிக்க இருக்கும் சினேகன், தனது யூடியூப் சேனல் குறித்தும் அறிவிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...