பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை கஸ்தூரி, தமிழக அரசியல் தொடர்பாகவும், அரசியல்வாதிகள் பற்றியும் விமர்சித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்திய நிகழ்வு ஒன்று குறித்து விமர்சித்ததற்கு அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் அதிமுக எம்.எல்.ஏ-க்களில், தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக 14-ந் தேதி தீர்ப்பு வெளியானது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர் வாதத்திடம் திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணியழகன் புகார் மனு அளித்தார். அதில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திரு நங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...