அதிமுக-வின் இரு அணிகள் இணையப் போகிறது என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருக்க, இன்று அநேகமாக இணைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ”காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா". என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன் ``விமர்சனங்கள் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து இருக்கக் கூடாது என கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...