நடிகர் பாண்டியராஜன், தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வு கட்டுரை எழுதியதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன் 1949-முதல் 2000-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து தாக்கல் செய்த கட்டுரைக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் பாண்டியராஜனுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...