‘அறம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை பெற்றிருக்கும் நயந்தாரா, ஹீரொயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, கமல், அஜித், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்குவதில் மும்முரம் காட்டி வரும் நயந்தாரா, அப்படியே தனது காதலரை ஹீரோவாக்கவும் ஒரு பக்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் ஹீரோவாக நடிக்கும் பட்சத்தில் அந்த படத்தில் தானே ஹீரோயினாக நடிப்பதோடு, அப்படத்தை தனது சொந்த பணத்திலேயே தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது காதலருக்கு பதிலாக அதர்வாவை ஹீரோவாக வைத்து நயந்தாரா படம் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். ‘இதயம் முரளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அவரது காதலரான விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறாராம்.
காதலுருக்காக தயாரிப்பாளராக மாறியுள்ள நயந்தாரா, கூடிய விரைவில் தனது நிஜ காதலரை ரீல் காதலராகவும் மாற்றியே தீருவேன், என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...