சிட்டி லைட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் இ.ஆனந்த் தயாரித்ட்திருக்கும் படம் ‘அறிவுக்கொழுந்துக’. அறிமுக இயக்குநர் செந்தில் பரிதி இயக்கியிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ளது.
கவின் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வெங்கட் கெளதம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்ய, ஜோசப் பாபின் கலையை நிர்மாணித்துள்ளார். பயர் கார்த்திக் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, டி.உதயகுமார் ஒலிக்கலவை பணியை கவனித்திருக்கிறார். நித்திஷ் ஸ்ரீராம் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள். பி.ஆர்.ஓ சங்க பொருளாளர் விஜய முரளி, செயலாளர் பெருதுளசி பழனிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் செந்தில் பரிதி, “ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக படிக்க வரும் நான்கு மாணவர்களின் பிரிக்க முடியாத ஃபெவிக்கால் நட்பையும், அதே கல்லூரியில் படிக்கும் நான்கு பெண்களுடனான அவர்களின் அமரத்துவமான காதலையும் எந்தவிதமான கற்பனையோ, ஒப்பனையோ இல்லாமல் உள்ளது உள்ளபடி காட்டும் முழுநீள நகைச்சுவை திரைப்படம் தான் ‘அறிவுக்கொழுந்துக’.
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இந்த நான்கு கல்லூரி மாணவர்களுக்கும் ஹரியர் என்றால் என்னவென்று தெரியாது. கல்லூரியின் முதலாம் ஆண்டில் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, மூன்றாவது ஆண்டில் கூட ஹரியர் என்றால் என்னவென்று தெரியாத இவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பாருங்கள், இதற்காக தான் ‘அறிவுக்கொழுந்துக’ என்ற தலைப்பு வைத்தோம். தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இந்த படத்தை பார்த்தால், தங்களது முடிவை கைவிட்டு விடுவார்கள். காரணம், இப்படிப்பட்ட இந்த நான்கு பேர்களும் உயிர் வாழும் போது நம்மால் வாழ முடியாதா! என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிடும்.
இந்த படத்திற்கு முதல்ல ‘ஆணியேபுடுங்க வேணாம்’ என்று தான் தலைப்பு வைத்திருந்தேன். தணிக்கை செய்யும் போது, தணிக்கை குழுவினர் இந்த தலைப்பை அனுமதிக்கவில்லை. அப்படி இந்த தலைப்பில் என்ன தவறு இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு சென்சார் குழுவின் அறிவுக்கொழுந்துக இருக்காங்க, அவர்களைப் பார்த்த பிறகு தான் என் படத்திற்கு ‘அறிவுக்கொழுந்துக’ என்ற தலைப்பையே நான் வைத்தேன்.
எதார்த்தமான விஷயத்தை இயல்பாக பதிவு செய்திருக்கிறோம். இந்த படத்தை முடிக்க ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போது படம் வந்த விதத்தை பார்த்த பிறகு அனைத்து கஷ்ட்டமும் பறந்துவிட்டது. தியேட்டர்க்குள்ள வரவங்கல இந்த படம் நிச்சயம் வெளியே போக வைக்காது. படம் ஓடும் இரண்டு மணி நேரமும் சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க.” என்றார்.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் செந்தில் பரிதி, பாரதிராஜாவிடம் ‘பொம்மலாட்டம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றதோடு, ரம்யா கிருஷ்ணனை வைத்து சீரியல் ஒன்றையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...